Pages

Monday, March 12, 2012

எதிர்காலத்தில் குஷ்பு தி.மு.க. தலைவராக வருவார்?


kushboo_latest_photos_stills_pics_01

தி.மு.க.வினர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஏன், நம்பமுடியவில்லையா? அதாவது, நில அகபரிப்புச் சட்டம் கொண்டு வந்ததுமே, அது தி.மு.க.வினருக்காக கொண்டு வரப்பட்டது… அதை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கோர்ட்டு படியேறினார்கள் தி.மு.க.வினர்கள்.

ஆனால், அச்சட்டம் தி.மு.க.வினரை தாக்கிவிட்டு, இன்று அ.தி.மு.க.வின் அதிகார மையங்களை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறதே… ராவணன், நடராஜன், திவாகரன் ஆகிய ஆட்டம் போட்ட ராஜாக்கள் எல்லாம் நில அபகரிப்பு வழக்கில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதை பார்க்கும் தி.மு.க.காரன் சந்தோஷப்பட்டுத்தானே ஆக வேண்டும்.

அதைவிட தி.மு.க.வினர் மிகுந்த மகிழ்ச்சி அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை இந்த நேரத்தில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆமாம். தி.மு.க. வரலாற்றில் யாருக்குமே கிடைத்திடாத ஒரு பாக்கியம் குஷ்பூவுக்கு கிடைத்திருக்கிறதே? ஐ.நா. சபையில், இளைஞர்களின் எதிர்காலம் குறித்து உரையாற்ற, இளைஞரணியின் செயலராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வில் இருந்த ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததா?

அக்கட்சியின் இளைஞர்களின் இளைஞிகளின் ஆற்றலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அடையாளமாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் கனிமொழிக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததா?

இல்லை… நாடாளுமன்ற பேச்சால், இலக்கிய பேச்சால்… நாகரீக பேச்சால் சிறப்படைந்தkarunanidhi_dayanidhi_maran_20070528_1 திருச்சி அசோகனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததா?

இல்லை… உலக கோட்டீஸ்வரராக இருந்த பில்கேட்சே, சென்னையில் வீட்டுக்கு வந்து டிபன் சாப்பிட்ட தயாநிதி மாறனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததா?

இல்லையே… ஒரு வருடத்தில் தி.மு.க.வில் சேர்ந்து… அரசியலில் சூறாவளியாக சுற்றித்திரிந்து வரும் குஷ்பூவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதை எண்ணி எண்ணி,. தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி மகிழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவரது தொண்டர்களும் அப்படித்தானே இருக்க வேண்டும். அதுதான் நியாயம்.

ஒரு காலத்தில், தி.மு.க. சிக்கலில் சிக்கி சிதறும் தருணத்தில் தி.மு.க.வை தூக்கி நிறுத்தப்போகும் தலைவராக குஷ்பூ வரத்தான் போகிறார். அவரை எல்லா கோஷ்டிகளும், குறிப்பாக ஸ்டாலின் கோஷ்டியும் ஆதரிக்கும்… அழகிரி கோஷ்டியும் ஆதரிக்கும்…. கனிமொழி கோஷ்டியும் ஆதரிக்கும்….

என்ன இப்படி பேசுகிறான் அம்பலவாணன்… என்று யாராவது நினைத்தால்…

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை எப்படி தோன்றியது என்று நினைத்துப்பாருங்கள்…

man_and_soniaஏ.ஓ.ஹூயும் என்ற வெள்ளைக்காரர் தான் காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். சிதறிக்கிடந்த இந்திய மக்களை ஒன்று சேர்க்க ஒரு அந்நியன் வந்ததை அன்று இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?

அதுபோலத்தான்… அண்ணன் தம்பி சண்டையால் உடையப் போகும் தி.மு.க.வை தாங்கிப்பிடிக்க குஷ்பு வந்தால், அனைத்து தரப்பும் சிரித்துக் கொண்டே குஷ்பு தலைமையை ஏற்கத்தானே போகிறது?

ஆகவே… யாராவது எதிர்காலத்தில் தி.மு.க.வில் நல்ல பதவியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள், உடனே செய்ய வேண்டியது என்ன?

குஷ்பூ மகளிர் மன்றம்… அல்லது குஷ்பூ பேரவை…. இல்லை ஐ.நா. கண்ட மங்கை பேரவை … ஏதோ ஒன்று ஆரம்பித்து வையுங்கள். எதிர்காலத்தில் பயன் அடையலாம்.

எதிர்கால தி.மு.க. தலைவர் குஷ்பூவுக்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள். அந்த காட்சியை காண பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டுகளை கடந்து வாழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்…

சரி மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலுக்கு வந்துவிடுகிறேன்…Rahul-Gandhi-11a

எப்படியோ… மன்மோகன் பிழைத்துக் கொண்டார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை மன்மோகனை பிரதமர் பதவியிலிருந்து தூக்கவே முடியாது. உ.பி. தேர்தலில் அடி வாங்கிய ராகுல் எழுந்து உட்கார இன்னும் ஐந்து வருடம் தேவைப்படும்…

அதனால், மன்மோகனுக்கு ஜாலி தான். ஆனால் இந்திய மக்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் பத்து ஆண்டுகளாக பிரதமர் பதவியை வகித்தார் என்ற பெருமையைத் தவிர மன்மோகனுக்கு கிடைக்கப்போவது எதுவுமே இல்லை 

No comments:

Post a Comment