
இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த துணைச் செயலர், உதவிச் செயலர், மருத்துவக் கல்லூரியின் இரு டாக்டர்கள் ஆகியோர் மீது விசாரணை நடத்துவதற்கு அரசின் அனுமதியை சி.பி.ஐ. கோரியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசின் அனுமதி கிடைத்த பிறகு குற்றப்பத்திரிகையில் அன்புமணி ராமதாஸின் பெயர் குற்றஞ்சாட்டப்பட்டவர் பட்டியலில் இணைக்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இயங்கி வரும் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியின் இரண்டாவது ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கடந்த 2008-ம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அந்தக் கல்லூரி நாடியது
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவக் கவுன்சில் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டது.
மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆய்வு நடத்திய குழுவினர், பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகளைச் சுட்டிக்காட்டி மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர், நடத்திய ஆய்வில் அனைத்து வசதிகளும் முறையாகச் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்ததாகத் தெரிகிறது.
இந்த நடவடிக்கையின்போது, அடிப்படை வசதிகள், ஆள் எண்ணிக்கை போன்றவை தொடர்பாக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தொடர்புகொள்ள முயன்றபோது, "இந்த வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்களின் பெயர்களை சிபிஐ இன்னும் இறுதி செய்யவில்லை' என்று அவரது தனிச் செயலர் சுவாமிநாதன் கூறினார்.
நன்றி... Tamil Leader
No comments:
Post a Comment