Pages

Monday, March 12, 2012

அமெரிக்காவின் தீர்மானம் ஜெயித்தால் கூட ஒரு வெங்காயமும் கிடைக்கப் போவதில்லை !


rajapaksa_Maria_Oteroஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஏதிராக அமெரிக்க கொண்டு வரும் தீர்மானம் இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் தலைவலியை ஏற்படுத்தும் என்றும் தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தரும் என்றும் உலகளாவிய நம்பிக்கை வைத்திருந்தனர் தமிழர்கள்.

இந்த விவகாரம் பற்றிய நமது முந்தைய கட்டுரைகளில் கூட ‘இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக வெற்றி பெற்றால் கூட இலங்கைக்கு எந்த பெரிய பிரச்னையும் இல்லை’ என்று தான் சொல்லி வந்தோம்.

அதே நேரம் இப்போது அமெரிக்காவின் சதிமுகமும் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. மார்ச் 7ம் தேதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அந்தத் தீர்மானத்தைப் படித்தாலே, தமிழர்களின் தலையை அமெரிக்கா எப்படி தடவியிருக்கிறது என்பது தெரியும்.

“பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளுக்கு அமைவாகwar_cirme_11 இருப்பதை உறுதிப்படுத்திட.... கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, சகல இலங்கையர்க்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதை உறுத்திபடுத்த வேண்டும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்த பரிந்துரைகளில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன எடுக்கப்பட இருக்கிறது என்ற விவரங்களை இலங்கை அரசு மனித உரிமை பேரவையின் முன்பு வைக்க வேண்டும். போரில் சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்ட புகார்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்காக இலங்கைக்கு ஐ.நா. தொழில்நுட்ப உதவிகளை செய்ய வேண்டும். அதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்”

அட.... அட..... அட... என்னே ஒரு வலிமையான தீர்மானம். “நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகிற மாதிரி அழு” என்ற பழமொழிக்கு ஏற்ப பார்த்தால் கூட அமெரிக்காவின் கண்டிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இலங்கையை சாட்டையால் அடிக்கப்போகிறேன் என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி.... அப்பாவி தமிழர்களிடையே மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கி.... எதிர்பார்க்க வைத்து.... ஏங்க வைத்து... கடைசியில் இலங்கை மீது ஒரு பூவை எடுத்து போட்டு, “அதட்டலாகத்தான் போட்டேன்” என்று ஒட்டு மொத்த தமிழர்களின் காதில் பூ சுற்றியிருக்கிறது அமெரிக்கா.

rajabakse_with_manஅமெரிக்காவின் இந்தத் தீர்மானம் முழுக்க முழுக்க இலங்கைக்கு சாதகமானதோ இல்லையோ... முழுக்க முழுக்க தமிழர்களுக்கு பாதகமானது. எப்படி?

அமெரிக்க தனது தீர்மானத்தில் நடந்து முடிந்த இலங்கை போர் பற்றி விசாரித்த, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தச் சொல்லியிருக்கிறது. அந்த அறிக்கையை யார் தயாரித்தது?

இலங்கை அரசு தான் நடத்திய போர் பற்றி தானே தயாரித்ததுதான் அந்த அறிக்கை. அதில் என்ன சொல்லியிருக்கிறது? “போரில் மனித உரிமைகளை மீறியிருப்பதாக சேனல்-4 வெளியிட்ட வீடியோ காட்சிகள் பொய். மேலும் ஐ.நா. நிபுணர் குழு விசார்ணை அறிக்கையில் இலங்கை அரசை குறை கூறியிருக்கும் விஷயங்களும் உண்மைக்கு மாறானவை” என்று சொல்லியிருக்கிறது.

இந்த அறிக்கையைத்தான் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க சொல்கிறது. அதாவது படுகொலையை செய்த ராஜபக்‌ஷே... நான் படுகொலையே செய்யவில்லை என்று தயாரித்த அறிக்கையை அப்படியே ஆமோதிக்கிறது அமெரிக்கா.

இந்தத் தீர்மானம் ஜெயித்தால் கூட தமிழர்களுக்கு இரு வெங்காயமும் கிடைக்கப் போவதில்லை.

அதே நேரம், தமிழ் ஈழத்தை தணியாத தாகமாகக் கொண்ட தமிழர்களுக்கு அமெரிக்கா war-crimes-colomboதனக்கே உரிய பாணியில் ஆப்பு வைத்துவிட்டது. அதாவது தனது தீர்மானத்தில் அமெரிக்கா, ’சகல இலங்கையருக்கும் நல்லிணக்கம் ஏற்படச் செய்ய வேண்டும்” என்று கேட்கிறது. சகல இலங்கையர்கள் என்றால், அதில் சிங்களவர்களையும் தமிழர்களையும் சேர்த்துத்தான் அமெரிக்கா அணுகுகிறது.

இதனால், மனித உரிமைப் பேரவையில் தமிழர்களை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டிருந்த மாயை உடைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அமெரிக்க மனித உரிமைப் பேரவையில் இப்படி உப்புச்சப்பற்ற இலங்கையோடு மறைமுக உடன்பாடு கொண்ட ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்த அதே 7ம் தேதி லண்டனில் சர்வதேச அறிஞர்கள் கலந்துக் கொண்ட கூட்டம் நடந்தது.

அதில் பேசிய பலரும் “2009ம் ஆண்டு புலிகளுக்கு ஏதிராக நடந்த போரில் இலங்கை அரசுக்கு அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஈரான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அச்சரியப்படத் தக்க வகையில் கூட்டு சேர்ந்து செயல்பட்டு, தமிழர்களை அழித்தன. மூன்று வருடங்களுக்கு முன் தமிழர்களை கொன்று குவிக்க ஆதரவாக இருந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்போது தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்பி ஏமாறாதீர்கள். மேற்குலகத்தை நம்பி எந்த முன்னெடுப்பும் செய்வது வீண் வேலை” என்றே எச்சரித்தனர்.

Nirupama_Rao_rajapaksaமுழுதாக சொல்லப்போனால் தமிழர்களுக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை எதிர்த்து இலங்கையில் ஏன் சிங்களர்கள் போராட்டத்தில் இறங்கினர். “ராஜபக்‌ஷே அரசு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது. இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்த்தி இருக்கிறது. இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்த்தி இருக்கிறது. போருக்குப் பிறகு எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாததால், வேலையில்லாத திண்டாட்டமும் வறுமையும் ஏமாற்றி திசை திருப்பத்தான் இந்தத் தீர்மானம் சிங்களர்களுக்கு எதிரானது என்று மாயையை ஏற்படுத்தி ராஜபக்‌ஷே தன்னை காப்பாற்றிக் கொண்டார்” என்கிறார்கள் கொழும்பு ஊடகவியலாளர்கள்.

ஆக.... அமெரிக்கா, ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டது. இதை வைத்து, ராஜ பக்‌ஷே தன் லோக்கல் பிரச்னைகளை சமாளிக்க சிங்களர்களை ஏமாற்றிவிட்டார். நாடகத்தின் முடிவில் ரத்தம் வழியும் தலையோடு துடித்துக் கொண்டிருப்பது ஈழத்தமிழர்கள் தான் !

நன்றி: ஆரா(தமிழக அரசியல்)

No comments:

Post a Comment