Pages

Tuesday, March 6, 2012

உலகின் மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோ : புதிய சாதனை


உலகின் மிக வேகமாக ஓடக்கூடிய செயற்கை ரோபோவாக Roboti Cheetah எனும் ரோபோ புதிய சாதனை படைத்துள்ளது.
சீட்டா வகை புலியின் உருவம் கொண்ட தலையின்றிய குறித்த ரோபோ, 29km/h எனும் வேகத்தில் ஓடி இப்புதிய சாதனையை படைத்துள்ளது. முன்னதாக 24 km/h எனும் வேகத்தில் ஓடக்கூடிய ரோபோ உருவாக்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது.

அமெரிக்காவின் பாதுகாப்பு உயர் தேர்ச்சி ஆராய்ச்சி திட்ட முகவர் நிலையத்தினால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ விலங்கு, நான்கு வருட முயற்சியின் பயனகாக இந்த சாதனையை புரிந்துள்ளது. மனிதனை விட மிக வேகமாக ஓடக்கூடிய தொழில்நுட்பம் இந்த ரொபோவில் இணைக்கப்பட்டுள்ளதால், யுத்த களத்தில் மிக வேகமாக எதிரியை துரத்தி பிடிப்பதற்கும், தாக்குவதற்குமென களத்தில் விட்டு பரிசோதிக்க போவதாக இதனை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க, அதற்கு ஈடுகொடுத்து பயணிக்கும் ரோபோ வீடியோ

No comments:

Post a Comment