Tuesday, March 13, 2012
Monday, March 12, 2012
மானம் கெட்ட தமிழனும்! மானம் உள்ள பீகாரிகளும்!
பீகார் மாநிலம், அவுரங்காபாத் அருகில் உள்ள நாபி என்ற இடத்தில் பீகார் மாநில அரசு 1800 மெகாவாட் உற்பத்தி திரன் கொண்ட அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது.
நாபியில் உள்ள பொது மக்களும் இந்த இடத்தில், அனல் மின்நிலையம் அமைக்க வேண்டாம் என்று போராடி வருகிறார்கள். (கவனிக்க வேண்டியது கூடங்குளம் அணு மின்நிலையம் நாபி அனல் மின்நிலையம்).
இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து பீகார் மாநிலத்தில் அமையும் அந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புறப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து பீகார் மாநிலத்தில் அமையும் அந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புறப்பட்டது.
அவுரங்காபாத் அருகில் உள்ள நாபியை லாரிகள் நெருங்கிய போது போராட்டம் நடத்திய பீகார் மாநில பொதுமக்கள் தமிழக லாரிகளையும், அதிலுள்ள பொருட்களையும் இங்கு இறக்க கூடாது என்று சிறை பிடித்து வைத்துக் கொண்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியதாவது லாரி டிரைவர், கிளீனர்களுக்கு சரியான சாப்பாட்டு வசதியில்லாமல் கடந்த 57 நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். உடனே மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிந்திக்கவும்: மானம்கெட்ட கருணாநிதி, போலி கம்யூனிஸ்ட்கள், தீவிரவாத இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பார்பன ஹிந்துத்துவா கூட்டமான தினமலர், சோ, சுபிரமனிய சாமி வகைறாக்கள் ஏன் இந்த செய்திகளை பற்றி பேசவில்லை. ஒரு மாநிலத்தின் 60 லாரிகள் 57 நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ளது இதை பற்றி ஏன் யாரும் வாய்திறக்க வில்லை. ஏன் இந்த மவுனம்? அதை பற்றி பேசினால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று சொல்லும் தங்களது மக்கள் விரோத முகமூடி களைந்து விடும் என்கிற பயமா.
பீகார் நாபி மக்கள் மானம்கெட்ட தமிழர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழக மக்களை போன்ற ஒரு மானம் ஈனம் இல்லாத ஜென்மங்களை உலகில் வேறு எந்த இனத்திலும் பார்க்க முடியாது. தனது உறவுகள் ஈழத்திலே கொல்லப்படும் போதும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போதும், வேடிக்கைபார்த்த கூட்டம் இன்று தனக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக கூடங்குளம் மக்களை பலியாக கொடுக்க ஆயிரம் உப்பு, சப்பு இல்லாத காரணங்களை சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பீகார் மக்கள் எதிர்ப்பது அணு உலையை அல்ல அனல் மின்நிலையத்தைதான் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தங்கள் பகுதியின் இயற்க்கை வளங்களை, சுகாதாரத்தை எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த மக்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். தமிழர்கள் இனியாவது திருந்துவார்களா? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மொத்த தமிழகமும் கொதித்தெலுமா. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்கும்படி செய்ய தமிழர்கள் குரல் கொடுப்பார்களா .....
இந்தியாவைக் காணோம்............
இந்த ஊரில் நூத்தியம்பது மனித இனங்கள் இருக்குன்னு ஒரு சமயம் நகரத்தந்தையுடன் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார். எல்லா இனங்களும் சேர்ந்து கொண்டாடும் விதமா கல்ச்சர் கலோர் (Culture Galore) என்ற பெயரில் ஒரு விழா, மார்ச் மாச முன் பாதியில் எதாவது ஒரு சனிக்கிழமைகளில் கடந்த 12 வருசமா நடந்துக்கிட்டு இருக்கு. இங்கத்து கோடைகாலம் ஃபிப்ரவரியோடு முடிஞ்சுரும். மிச்சம்மீதி இருக்கும் வெயிலை எதுக்குப் பாழாக்கணும்?
நம்மூர் நூலகமும், சிட்டிக்கவுன்ஸிலும், ரேஸ் ரிலேஷன்ஸ் அலுவலகமும், எத்னிக் கவுன்ஸிலும் ஒன்னு சேர்ந்து நடத்தும் விழா. உலகின் பலவேறு பகுதிகளில் இருந்தும் வந்து இங்கே வாழ்க்கை நடத்தும் மக்கள் தங்கள் கலை, கலாச்சாரம், உணவு, உடை, விளையாட்டு இப்படி இருக்கும் சமாச்சாரங்களை மற்ற இனங்களுக்கு எடுத்துக்காட்ட இதை விட வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?
மதியம் 12 முதல் நாலுமணி வரை நடக்கும் விழா என்பதால் ஒரு சுத்துச் சுத்திப் பார்த்துட்டு அங்கேயே ஸ்டால்களில் விற்பனைக்கு இருக்கும் சாப்பாடுகளில் பிடிச்ச ஐட்டங்களை வாங்கிக்கிட்டு மேடைக்கு முன்னால் உக்கார்ந்துக்கிட்டால் ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிச்சுக்கிட்டே உணவை உள்ளே தள்ளலாம்.
ஒரு பக்கம் முழுசும் சாப்பாடுகள். இரான், எகிப்து, சீனா, தென் ஆஃப்ரிகா, ஜப்பான், கொரியா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்துன்னு வகைவகையா. இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் காலியா அம்போன்னு கிடந்துச்சு. கடந்த சிலவருசங்களா இந்தியன் க்ளப் செயல்படாம முடங்கிக் கிடக்காம். தலைமை சரி இல்லை. கவுன்ஸில் கொடுக்கும் 'நிதி உதவியை எதாவது ஒரு ரூபத்தில் தானே அமுக்கணும்' என்ற அட்டூழியம்தான் காரணமாம். இந்த க்ளப்பை ஆரம்பிச்சவர் ( எல்லாம் நம்ம கோபால்தான்) மனசொடைஞ்சு வெத்து இடத்தைப் பார்த்தப்ப எனக்கு ரொம்பப் பாவமா இருந்துச்சு:(
சீனப்பிள்ளைகள் மார்ஷியல் ஆர்ட் செஞ்சு காமிச்சாங்க. பிள்ளைகளின் தந்தை இங்கே இந்தக் கலையைச் சொல்லிக்கொடுக்கும் பள்ளி நடத்தறார். பள்ளி பள்ளின்னா ரெகுலர் பள்ளிக்கூடம் இல்லை. வார இறுதிகளில் வகுப்பு நடத்தித்தான் மக்கள் அவுங்கவுங்க கலைகளை வளர்த்துக்கிட்டு இருக்காங்களாக்கும் கேட்டோ!
அமெரிக்காவின் தீர்மானம் ஜெயித்தால் கூட ஒரு வெங்காயமும் கிடைக்கப் போவதில்லை !
ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஏதிராக அமெரிக்க கொண்டு வரும் தீர்மானம் இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் தலைவலியை ஏற்படுத்தும் என்றும் தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தரும் என்றும் உலகளாவிய நம்பிக்கை வைத்திருந்தனர் தமிழர்கள்.
இந்த விவகாரம் பற்றிய நமது முந்தைய கட்டுரைகளில் கூட ‘இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக வெற்றி பெற்றால் கூட இலங்கைக்கு எந்த பெரிய பிரச்னையும் இல்லை’ என்று தான் சொல்லி வந்தோம்.
அதே நேரம் இப்போது அமெரிக்காவின் சதிமுகமும் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. மார்ச் 7ம் தேதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அந்தத் தீர்மானத்தைப் படித்தாலே, தமிழர்களின் தலையை அமெரிக்கா எப்படி தடவியிருக்கிறது என்பது தெரியும்.
“பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளுக்கு அமைவாக
இருப்பதை உறுதிப்படுத்திட.... கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, சகல இலங்கையர்க்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதை உறுத்திபடுத்த வேண்டும்.
இருப்பதை உறுதிப்படுத்திட.... கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, சகல இலங்கையர்க்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதை உறுத்திபடுத்த வேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்த பரிந்துரைகளில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன எடுக்கப்பட இருக்கிறது என்ற விவரங்களை இலங்கை அரசு மனித உரிமை பேரவையின் முன்பு வைக்க வேண்டும். போரில் சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்ட புகார்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்காக இலங்கைக்கு ஐ.நா. தொழில்நுட்ப உதவிகளை செய்ய வேண்டும். அதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்”
அட.... அட..... அட... என்னே ஒரு வலிமையான தீர்மானம். “நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகிற மாதிரி அழு” என்ற பழமொழிக்கு ஏற்ப பார்த்தால் கூட அமெரிக்காவின் கண்டிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இலங்கையை சாட்டையால் அடிக்கப்போகிறேன் என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி.... அப்பாவி தமிழர்களிடையே மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கி.... எதிர்பார்க்க வைத்து.... ஏங்க வைத்து... கடைசியில் இலங்கை மீது ஒரு பூவை எடுத்து போட்டு, “அதட்டலாகத்தான் போட்டேன்” என்று ஒட்டு மொத்த தமிழர்களின் காதில் பூ சுற்றியிருக்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் முழுக்க முழுக்க இலங்கைக்கு சாதகமானதோ இல்லையோ... முழுக்க முழுக்க தமிழர்களுக்கு பாதகமானது. எப்படி?
அமெரிக்க தனது தீர்மானத்தில் நடந்து முடிந்த இலங்கை போர் பற்றி விசாரித்த, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தச் சொல்லியிருக்கிறது. அந்த அறிக்கையை யார் தயாரித்தது?
இலங்கை அரசு தான் நடத்திய போர் பற்றி தானே தயாரித்ததுதான் அந்த அறிக்கை. அதில் என்ன சொல்லியிருக்கிறது? “போரில் மனித உரிமைகளை மீறியிருப்பதாக சேனல்-4 வெளியிட்ட வீடியோ காட்சிகள் பொய். மேலும் ஐ.நா. நிபுணர் குழு விசார்ணை அறிக்கையில் இலங்கை அரசை குறை கூறியிருக்கும் விஷயங்களும் உண்மைக்கு மாறானவை” என்று சொல்லியிருக்கிறது.
இந்த அறிக்கையைத்தான் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க சொல்கிறது. அதாவது படுகொலையை செய்த ராஜபக்ஷே... நான் படுகொலையே செய்யவில்லை என்று தயாரித்த அறிக்கையை அப்படியே ஆமோதிக்கிறது அமெரிக்கா.
இந்தத் தீர்மானம் ஜெயித்தால் கூட தமிழர்களுக்கு இரு வெங்காயமும் கிடைக்கப் போவதில்லை.
அதே நேரம், தமிழ் ஈழத்தை தணியாத தாகமாகக் கொண்ட தமிழர்களுக்கு அமெரிக்கா
தனக்கே உரிய பாணியில் ஆப்பு வைத்துவிட்டது. அதாவது தனது தீர்மானத்தில் அமெரிக்கா, ’சகல இலங்கையருக்கும் நல்லிணக்கம் ஏற்படச் செய்ய வேண்டும்” என்று கேட்கிறது. சகல இலங்கையர்கள் என்றால், அதில் சிங்களவர்களையும் தமிழர்களையும் சேர்த்துத்தான் அமெரிக்கா அணுகுகிறது.
தனக்கே உரிய பாணியில் ஆப்பு வைத்துவிட்டது. அதாவது தனது தீர்மானத்தில் அமெரிக்கா, ’சகல இலங்கையருக்கும் நல்லிணக்கம் ஏற்படச் செய்ய வேண்டும்” என்று கேட்கிறது. சகல இலங்கையர்கள் என்றால், அதில் சிங்களவர்களையும் தமிழர்களையும் சேர்த்துத்தான் அமெரிக்கா அணுகுகிறது.
இதனால், மனித உரிமைப் பேரவையில் தமிழர்களை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டிருந்த மாயை உடைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அமெரிக்க மனித உரிமைப் பேரவையில் இப்படி உப்புச்சப்பற்ற இலங்கையோடு மறைமுக உடன்பாடு கொண்ட ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்த அதே 7ம் தேதி லண்டனில் சர்வதேச அறிஞர்கள் கலந்துக் கொண்ட கூட்டம் நடந்தது.
அதில் பேசிய பலரும் “2009ம் ஆண்டு புலிகளுக்கு ஏதிராக நடந்த போரில் இலங்கை அரசுக்கு அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஈரான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அச்சரியப்படத் தக்க வகையில் கூட்டு சேர்ந்து செயல்பட்டு, தமிழர்களை அழித்தன. மூன்று வருடங்களுக்கு முன் தமிழர்களை கொன்று குவிக்க ஆதரவாக இருந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்போது தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்பி ஏமாறாதீர்கள். மேற்குலகத்தை நம்பி எந்த முன்னெடுப்பும் செய்வது வீண் வேலை” என்றே எச்சரித்தனர்.
முழுதாக சொல்லப்போனால் தமிழர்களுக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை எதிர்த்து இலங்கையில் ஏன் சிங்களர்கள் போராட்டத்தில் இறங்கினர். “ராஜபக்ஷே அரசு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது. இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்த்தி இருக்கிறது. இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்த்தி இருக்கிறது. போருக்குப் பிறகு எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாததால், வேலையில்லாத திண்டாட்டமும் வறுமையும் ஏமாற்றி திசை திருப்பத்தான் இந்தத் தீர்மானம் சிங்களர்களுக்கு எதிரானது என்று மாயையை ஏற்படுத்தி ராஜபக்ஷே தன்னை காப்பாற்றிக் கொண்டார்” என்கிறார்கள் கொழும்பு ஊடகவியலாளர்கள்.
ஆக.... அமெரிக்கா, ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டது. இதை வைத்து, ராஜ பக்ஷே தன் லோக்கல் பிரச்னைகளை சமாளிக்க சிங்களர்களை ஏமாற்றிவிட்டார். நாடகத்தின் முடிவில் ரத்தம் வழியும் தலையோடு துடித்துக் கொண்டிருப்பது ஈழத்தமிழர்கள் தான் !
நன்றி: ஆரா(தமிழக அரசியல்)
Subscribe to:
Posts (Atom)


