Tuesday, March 13, 2012
ஆபத்து ! டீ குடித்தால் வயிற்றில் மெழுகு வளர்கிறதா?
தலைவலிக்கு டீ குடித்தால் , வயிற்றில் மெழுகு வளர்கிறதா? என்ன அநியாயம் இது?
திருட்டு போன அல்லது காணாமல் மொபைலை திரும்பப் பெற..
உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா....?
அல்லது
கவனக் குறைவாகத் தொலைத்து விட்டீர்களா...?
இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி
அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.
எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல்
இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான
ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து
டயல் செய்திடவும்.
இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல்
போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile
Equipment Identity) என அழைப்பார்கள்.
இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல்
கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net.
இதில் கீழ்க்காணும் தகவல்களை தர வேண்டும்:-
பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல்
செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும்
மொபைல் போனின் அடையாள எண்.
காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான
கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.
அந்த மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது
பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும்
தெரியப்படுத்துவார்கள்.
Monday, March 12, 2012
மானம் கெட்ட தமிழனும்! மானம் உள்ள பீகாரிகளும்!
பீகார் மாநிலம், அவுரங்காபாத் அருகில் உள்ள நாபி என்ற இடத்தில் பீகார் மாநில அரசு 1800 மெகாவாட் உற்பத்தி திரன் கொண்ட அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது.
நாபியில் உள்ள பொது மக்களும் இந்த இடத்தில், அனல் மின்நிலையம் அமைக்க வேண்டாம் என்று போராடி வருகிறார்கள். (கவனிக்க வேண்டியது கூடங்குளம் அணு மின்நிலையம் நாபி அனல் மின்நிலையம்).
இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து பீகார் மாநிலத்தில் அமையும் அந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புறப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து பீகார் மாநிலத்தில் அமையும் அந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புறப்பட்டது.
அவுரங்காபாத் அருகில் உள்ள நாபியை லாரிகள் நெருங்கிய போது போராட்டம் நடத்திய பீகார் மாநில பொதுமக்கள் தமிழக லாரிகளையும், அதிலுள்ள பொருட்களையும் இங்கு இறக்க கூடாது என்று சிறை பிடித்து வைத்துக் கொண்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியதாவது லாரி டிரைவர், கிளீனர்களுக்கு சரியான சாப்பாட்டு வசதியில்லாமல் கடந்த 57 நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். உடனே மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிந்திக்கவும்: மானம்கெட்ட கருணாநிதி, போலி கம்யூனிஸ்ட்கள், தீவிரவாத இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பார்பன ஹிந்துத்துவா கூட்டமான தினமலர், சோ, சுபிரமனிய சாமி வகைறாக்கள் ஏன் இந்த செய்திகளை பற்றி பேசவில்லை. ஒரு மாநிலத்தின் 60 லாரிகள் 57 நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ளது இதை பற்றி ஏன் யாரும் வாய்திறக்க வில்லை. ஏன் இந்த மவுனம்? அதை பற்றி பேசினால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று சொல்லும் தங்களது மக்கள் விரோத முகமூடி களைந்து விடும் என்கிற பயமா.
பீகார் நாபி மக்கள் மானம்கெட்ட தமிழர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழக மக்களை போன்ற ஒரு மானம் ஈனம் இல்லாத ஜென்மங்களை உலகில் வேறு எந்த இனத்திலும் பார்க்க முடியாது. தனது உறவுகள் ஈழத்திலே கொல்லப்படும் போதும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போதும், வேடிக்கைபார்த்த கூட்டம் இன்று தனக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக கூடங்குளம் மக்களை பலியாக கொடுக்க ஆயிரம் உப்பு, சப்பு இல்லாத காரணங்களை சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பீகார் மக்கள் எதிர்ப்பது அணு உலையை அல்ல அனல் மின்நிலையத்தைதான் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தங்கள் பகுதியின் இயற்க்கை வளங்களை, சுகாதாரத்தை எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த மக்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். தமிழர்கள் இனியாவது திருந்துவார்களா? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மொத்த தமிழகமும் கொதித்தெலுமா. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்கும்படி செய்ய தமிழர்கள் குரல் கொடுப்பார்களா .....
இந்தியாவைக் காணோம்............
இந்த ஊரில் நூத்தியம்பது மனித இனங்கள் இருக்குன்னு ஒரு சமயம் நகரத்தந்தையுடன் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார். எல்லா இனங்களும் சேர்ந்து கொண்டாடும் விதமா கல்ச்சர் கலோர் (Culture Galore) என்ற பெயரில் ஒரு விழா, மார்ச் மாச முன் பாதியில் எதாவது ஒரு சனிக்கிழமைகளில் கடந்த 12 வருசமா நடந்துக்கிட்டு இருக்கு. இங்கத்து கோடைகாலம் ஃபிப்ரவரியோடு முடிஞ்சுரும். மிச்சம்மீதி இருக்கும் வெயிலை எதுக்குப் பாழாக்கணும்?
நம்மூர் நூலகமும், சிட்டிக்கவுன்ஸிலும், ரேஸ் ரிலேஷன்ஸ் அலுவலகமும், எத்னிக் கவுன்ஸிலும் ஒன்னு சேர்ந்து நடத்தும் விழா. உலகின் பலவேறு பகுதிகளில் இருந்தும் வந்து இங்கே வாழ்க்கை நடத்தும் மக்கள் தங்கள் கலை, கலாச்சாரம், உணவு, உடை, விளையாட்டு இப்படி இருக்கும் சமாச்சாரங்களை மற்ற இனங்களுக்கு எடுத்துக்காட்ட இதை விட வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?
மதியம் 12 முதல் நாலுமணி வரை நடக்கும் விழா என்பதால் ஒரு சுத்துச் சுத்திப் பார்த்துட்டு அங்கேயே ஸ்டால்களில் விற்பனைக்கு இருக்கும் சாப்பாடுகளில் பிடிச்ச ஐட்டங்களை வாங்கிக்கிட்டு மேடைக்கு முன்னால் உக்கார்ந்துக்கிட்டால் ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிச்சுக்கிட்டே உணவை உள்ளே தள்ளலாம்.
ஒரு பக்கம் முழுசும் சாப்பாடுகள். இரான், எகிப்து, சீனா, தென் ஆஃப்ரிகா, ஜப்பான், கொரியா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்துன்னு வகைவகையா. இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் காலியா அம்போன்னு கிடந்துச்சு. கடந்த சிலவருசங்களா இந்தியன் க்ளப் செயல்படாம முடங்கிக் கிடக்காம். தலைமை சரி இல்லை. கவுன்ஸில் கொடுக்கும் 'நிதி உதவியை எதாவது ஒரு ரூபத்தில் தானே அமுக்கணும்' என்ற அட்டூழியம்தான் காரணமாம். இந்த க்ளப்பை ஆரம்பிச்சவர் ( எல்லாம் நம்ம கோபால்தான்) மனசொடைஞ்சு வெத்து இடத்தைப் பார்த்தப்ப எனக்கு ரொம்பப் பாவமா இருந்துச்சு:(
சீனப்பிள்ளைகள் மார்ஷியல் ஆர்ட் செஞ்சு காமிச்சாங்க. பிள்ளைகளின் தந்தை இங்கே இந்தக் கலையைச் சொல்லிக்கொடுக்கும் பள்ளி நடத்தறார். பள்ளி பள்ளின்னா ரெகுலர் பள்ளிக்கூடம் இல்லை. வார இறுதிகளில் வகுப்பு நடத்தித்தான் மக்கள் அவுங்கவுங்க கலைகளை வளர்த்துக்கிட்டு இருக்காங்களாக்கும் கேட்டோ!
Subscribe to:
Posts (Atom)

